சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க – இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் வாரீர்.

இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி. சரியாக 5 மாதத்திற்கு பின் இந்தப்பதிவு நம் தளத்தில் இருந்து வெளிவருகிறது. லட்சகணக்கான இமெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்புவதற்கு சில மாதங்கள் கூட எடுத்துக்கொண்டது,  மீதமுள்ள சில நூறு இமெயில்களுக்கும் இறைவன் அருளால் விரைவில் பதில் அனுப்புகிறோம். நம் தளத்திலே மருந்தை  தெரிவிக்கலாமே என்று பல பேர் கேள்வி கேட்கின்றனர், நம் சித்தர்களின் பாடலில் தேடி வந்து கேட்பவர்களுக்கு மட்டும் மருந்து கொடு என்று இருக்கிறது, அதனால் தான் இமெயில் மூலம் கேட்க சொல்லி மருந்து அனுப்புகிறோம், நமக்கு வரும் பல இமெயில்களில் ஒரே வரியில் கேள்வி கேட்பதை பலர் வாடிக்கையாக  கொண்டுள்ளனர், நோயாளியின் பெயர் , வயது , அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாமல் எப்படி மருந்து கொடுப்பது ? இந்த காரணத்தினால் பல இமெயில்களுக்கு பதில் அனுப்ப இயலாமல் போனது.

nature

9 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பெண்மணி (வயது 70) தன் நோய்க்காக மருந்து கேட்டு இருந்தார், ஒரு அரிய வகை நோய் தான், சித்தர்களின் பாடலில் எளிமையான மருந்து இருந்தது உடனடியாக அதை அப்படியே அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கு அந்த அம்மா இங்கு நீங்கள் தெரியப்படுத்திய மூலிகைகள் ஏதும் இல்லை என்று கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தினால் Continue reading

கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி.

UterineFibroids

நான்கு மாதங்களுக்கு முன் நம் வலைப்பூவின் வாசகர்களில் ஒருவர் சார்ஜாவில் இருந்து இமெயில் மூலம் கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து பற்றி கேட்டிருந்தார். மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி, சார்ஜாவில் இருக்கும் அந்த சகோதரியை ஸ்கைப் மூலம் வர சொல்லி முழுமையாக அவரின் பிரச்சினைகள் மற்றும் உணவு பழக்கம் என அனைத்தையும் கேட்டபின், நம் குருநாதர் அகத்தியரின் நூலில் இதற்கு மருந்து இருக்கின்றதா என்று பார்த்த போது குருவின் திருவருளால் மருந்து கிடைத்தது. இயற்கை மருத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் இவருக்கு இமெயில் மூலம் மருந்து தெரியப்படுத்தி இருந்தோம், இந்த மருந்துகளை சார்ஜா செல்லும் அவரின் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் சித்த மருந்து கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளார். மருந்து சாப்பிட ஆரம்பித்ததும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரியப்படுத்தி கொண்டிருந்தார். சரியாக 28 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது. அதன் பின் மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை நீர்கட்டி இருந்ததற்கான அறிகுறியே Continue reading

சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.

இயற்கை உணவு உலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட சுகர்மருந்து சாப்பிட்டு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் நல்ல பயன்அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நமக்கு இமெயிலில் வரும் சில அடிப்படையான கேள்விகள் பற்றி பார்ப்போம்.

கேள்வி : சுகர் மருந்து கேட்டு இமெயில் அனுப்பி பல நாட்கள் ஆகிறது இன்னும் மருந்து பற்றிய இமெயில் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் ?

பதில் : நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் பதில் அனுப்ப முடிகிறது. முடிந்தவரை வேகமாக பதில் அனுப்ப முயற்சிக்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நேரங்களில் பதில் அனுப்ப சில வாரங்கள் அல்லது 1 மாதம் கூட ஆகும். தாமதம் ஆனாலும் கண்டிப்பாக  உங்கள் இமெயிலுக்கு சுகர் மருந்து வந்து சேரும்.

கே : சுகர் மருந்து எடுத்து சுகரின் அளவு குறைந்துவிட்டது தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டுமா ? மொத்தமாக எவ்வளவு நாள் சுகர் மருந்து எடுக்க வேண்டும் ? Continue reading

மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு

05 Photo

கடவுளுக்கு அடுத்ததாக நாம் நினைக்கும் ஒருவர் தான் மருத்துவர், ஆதி காலத்தில் மருத்துவம் என்பது சேவைக்கான ஒரு இடமாகத்தான் இருந்தது. அரசனுக்கு வைத்தியம் செய்யும் அரச வைத்தியர் தான் வசதியில்லாத ஏழைக்கும் வைத்தியம் செய்வார்,  இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு காசு , பணம் என்பது ஒரு போதும் பொருட்டல்ல. எந்த நேரமும் நோய்களை நீக்குவதிலே கருத்தாக இருந்துள்ளனர். மருந்து சாப்பிட்டு குணம் கிடைத்தவர் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வரே தவிர ஒரு போதும் இவ்வளவு  பணம் கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது, இன்னும் இது போல் ஒரு சில  வைத்தியர்கள் கிராமங்களிலும் மலைகளிலும் முகம் தெரியாமல் வசிக்கின்றனர். சேவைக்கான மருத்துவமனை இக்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை இந்த  வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Continue reading

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

ஜலதோசம், தும்மல்

ஜலதோசம், தும்மல்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக Continue reading

சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.

சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை உணவு உலகத்தின் வாசகர் ஒருவர்  பின்னோட்டத்தில் ஒரு கேள்வி எழுதி இருந்தார். அவர் அனுப்பிய செய்தி  பின்வருமாறு.
// தயவு செய்து மருந்துகளையும் உங்கள் வலைப் பதிவிலேயே தெரிவியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோய்க்கு கூறிய மருந்தை நான் பல பேருக்கு சொல்லி
மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததன் காரணமாக பல பேர் இன்று
பயனடைந்திருக்கிறார்கள். இதை வைத்து பிழைக்க நினைக்கும் சில
அற்பர்களுக்காக பல பேருக்கு போய்ச் சேர வேண்டிய கருத்தை
மறைக்காதீர்கள் இப்படி மறைத்து மறைத்துத்தான் பல இயற்கை மருந்துகள்
தெரியாமலே போய் விட்டன. //

அன்பருக்கு தாங்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த மருந்தை கண்டுபிடித்தது நாம் அல்ல , ஏற்கனவே சித்தர்கள்  கண்டுபிடித்து எழுதி வைத்ததைத்தான் நாம் சொல்கிறோம்.நமக்கு பரிபாசையில் இருக்கும் மருந்தை புரிய வைத்த எம் குருநாதர் அகத்தியர் சொல்லும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம்  கட்டுப்பட்டவராகத்தான் இருக்க முடியும். குருநாதர் நூலில் தெரிவித்ததை அப்படியே தெரிவிக்கிறோம். Continue reading

பத்தே நிமிடத்தில் பல் வலி குணமானவரின் சிறப்பு பேட்டி.

இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்,  ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.

பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்

சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம். அதிகாலை Continue reading

%d bloggers like this: