வெரிகோஸ் வெயின் குணமான தோழியின் சிறப்பு பேட்டி

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.  நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு பெயர் வெரிகோஸ் வெயின் என்னும் நோய்,  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. இந்த நோய்க்கு 48 நாட்களிலே முழுமையான குணம் அடைந்த தோழியின் பேட்டியை இங்கு அப்படியே கொடுத்துள்ளோம்.

வெரிகோஸ் வெயின்

இவர் வெரிகோஸ் வெயின் நோய் பற்றி இமெயிலில் கேட்டிருந்தார். 1 மாதம் கழித்து தான் இவர் இமெயிலுக்கு பதில் அனுப்ப்பட்டது. ஒரு மரத்தின் காய் தான் இவருக்கு மருந்து அதை எப்படி, எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அனுப்பி இருந்தோம் , சில நாட்கள் கழித்து நாங்கள் வசிக்கும் பகுதியில் இது கிடைக்கவில்லை என்றும் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தலாமா என்று கேட்டு இருந்தார்.  நம் வலைப்பூவின் வாசகர்களில் ஒருவரான சக்திவேல் என்பவரிடம் இது பற்றி கேட்டு உங்களால் அவருக்கு குறிப்பிட்ட மரத்தின் காய் பறித்து அனுப்ப முடியுமா என்று கேட்டோம் எந்த மறுப்பும் சொல்லாமால் உடனடியாக கொரியர் மூலம் அவருக்கு அனுப்பினார். கொரியர் கட்டணத்தை தவிர வேறு எந்த பணமும் வாங்கவில்லை.( ஒரு முறை அல்ல 3 முறைக்கும் மேல் அனுப்பி இருக்கிறார்) அவருக்கு இயற்கை உணவு உலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நேரடியான பேட்டி :

என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் முன் எனக்கு நோயின் விபரங்களையும் அதை குணபடுத்தும் முறையையும் தெரிவித்து என் நீண்ட நாள் பிரச்சன்னைக்கு தீர்வு தந்த இயற்கை உணவு உலகம் வலை தளத்திற்கு என் மனமார்ந்த நன்றி.  

எனக்கு மருந்து தொடர்ந்து கிடைக்கசெய்த நண்பருக்கு மிக்க நன்றி.

மிகவும் பீடிகையாக தொடங்கும் என் அனுபவத்தை படித்த பிறகு அனைவருக்கும் நான் ஏன் மனமார இத்தனை நன்றி சொல்கிறேன் என்பது புரியும்.

என் பெயர் வெண்ணிலா கடந்த வருடங்களாகபெங்களூரில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிகிறேன். வயது 35 .நான் பருமனான உடல் அமைப்பு கொண்டவள்.  எனக்கு  கால் தொடைக்கு கீழ்ப் பகுதி, முட்டிக்காலுக்கு பின்புறத்திலும்  நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருந்தது.  இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது பெரியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறினார்.  ஆனால் எனக்கு சம்மதம் இல்லை.  ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்ற பொது மாத்திரைகளும் ஆயில் மசாஸும் தொடர்ந்து செய்ய வலியுறித்தினார்.
மாதம் 3000 முதல் 4000 வரை செலவு செய்தும் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை.  இயற்க்கை வைத்தியத்தில் எனக்கு நம்பிக்கை இருந்ததால் அதை பற்றி தெரிந்து கொள்ள வலைத்தளங்களை தேடினேன். சர்க்கரை நோயிலிருந்து இயற்க்கை முறையில் குணமானவரின் தகவல்களை கண்டபோது இந்த வலை தளத்தின் இதர பயனுள்ள தகவல்களை கிடைக்க பெற்றேன். என் தாய் தற்போது சுகர் மருந்து சாப்பிட்டு வருகிறார் நல்ல பலன் கிடைத்துள்ளது.
அதனால் எனக்கு உள்ள இந்த வெரிகோஸ் வெயின் நோயை பற்றி தெரிவித்து அதற்கு ஏதேனும் இயற்க்கை மருந்து உள்ளதா என்று மெயில் அனுப்பியிருந்தேன். பதில் வந்தது இந்த நோயின் அறிகுறி மற்றும் ஏற்பட காரணங்களையும் தெளிவாக நண்பர் அனுப்பியிருந்தார்.  பின் அதன் மருந்தையும் அதை உபயோகிக்கும் முறையையும் தெளிவாக விளக்கி இருந்தார்.
இது உட்கொள்ளும் மருந்து இல்லை.  ஆனால் குறைந்தது 48 நாட்கள் இந்த மருந்தை உபயோகிக்க வேண்டும் என்றும், பயன்படுத்த தொடங்கிய 9 நாட்களில் வலி குறையும் என்றும் தெரிவித்து இருந்தார்.  உண்மையில் அந்த பலன் கிடைத்தது.  
தினமும் காலையில் மருந்தை தடவி 2 மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ நல்ல பலன் கிடைத்தது. சிகிச்சையின் பொது மருந்து தடவிய இடத்தில் அரிப்பது போன்ற உணர்வு இருந்தது அந்த இடத்தில் கஸ்துரி மஞ்சள் தடவ அரிப்பு குறைந்தது.  எனக்கு சிறிதும் பெரிதுமாக 6 கட்டிகள் இருந்தது,  48 நாட்கள் முடிந்தபிறகு ஒரே ஒரு கட்டி மட்டும் உள்ளது அதுவும் சிறிதாகவே உள்ளது.  நண்பரின் ஆலோசனை படி அதற்க்கு மட்டும் மருந்து தேய்த்துக்கொண்டு வருகிறேன்.  என் நீண்ட நாள் பிரச்சனை தீர்ந்து கொண்டு இருப்பதில் மிக்க சந்தோசமாக உள்ளேன்.  என்னைப்போல் பிறரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தை கூறி உள்ளேன்.
____________________________________________________________________________
இவரின் விடாமுயற்சிக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த பலனை இங்கு பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்சி அடைகிறோம். வெரிகோஸ் வெயின் உள்ளவர்கள் இமெயில் மூலம் தொடர்பு கொண்டால் அதற்கான மருந்து முறைகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  ம்ருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை , இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கை வாசிதான்.

1,053 responses to this post.

 1. எனக்கும் இந்த வெரிகோஸ் வெயின் என்னும் முடிச்சு உள்ளது. எனக்கும் இதைபற்றிய மருத்துவ முறையினை தெரிய படுத்தவும்.

  மிக்க நன்றி
  கணபதி
  மதுரை, தமிழ்நாடு

  Like

  மறுமொழி