சென்னை மக்களை தாக்கும் புதிய நோய் ( குடகரி ) மருந்து.

kudakari

சென்னையில் வெள்ளம் வடிந்த பின் மக்களை தாக்கும் ஒரு நோய் காற்றின்  மூலம் வேகமாக பரவிவருகிறது. சில நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நம் வலைப்பூ வாசகி ஒருவர் தன் குடும்பத்தில் ஒருவருக்கு வயிற்றோட்டம், வாந்தி மற்றும் காய்ச்சல் விட்டு விட்டு வருவது போல் இருக்கிறது என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தார்.  உடனடியாக நிலவேம்பு கசாயம் குடிக்கும் படி கூறினோம். ஆனால்  நிலவேம்பு கசாயம் பயன் தரவில்லை என்று கூறினார். மாதுளை பழம் சூஸ்  ஓரளவிற்கு வேலை செய்திருக்கிறது. அதோடு இந்த நோய் தன்  குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக எல்லோருக்கும் பரவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சித்தர்களின் பாடல்களில் பல வகையான சுரத்திற்கு  மருந்து இருந்தாலும் மேலே குறிப்பிட்ட சுரத்திற்கான காரணத்தை முழுதும் ஒத்துபோகக்கூடிய அளவில் நம் குருநாதரின் நூலில் ஒரு பாடல்  கிடைத்தது அப்படியே பகிர்ந்து கொள்கிறோம்.

வயிற்றில் தான் வாயு பொருமி அக்னி மீறி அசதியாம்
வாயாலுண்ணும் உணவு சொல் கேளா வாந்தி போச்செய்யும்
கண்ணை விழித்துப்புரட்டுவன் கைகால்சுற்றி தலை நடுங்கும்
கனத்த வாயு மிகுந்து ஒடித்திரிந்து வயிற்றில் கல்போல் திரளூம்
உடலெங்கும் ஒடும் குடவாயுதான் பசியை ஒடுக்கும் மூத்திரம் தடுக்கும்.
உடலென்ன வலி என்ன நெஞ்சு விலா குடல் கை கால் தொடை
வாயில் ஊற்றும் தண்ணீரும் யக்னியாகும் மலமும் ஊத்த நாத்தமாகும்.
வயிற்றில் அக்னி மந்திந்து யுண்ட அன்னம் சீரணமாகமல் பிரவர்த்திக்கும்.

மேலே கூறிய நோய்க்கு அறிகுறிகளைப்பற்றி பார்க்கும் போது ஆச்சர்யம்  தான் மேலிட்டது 90 சதவீதத்திற்கு மேல் அப்படியே இருந்தது. இந்த நோய்க்கான அறிகுறியாக சொல்வது என்னவென்றால்

1. வயிற்றில் வாயு அதிகமாகி உடல் சூட்டால் அசதி உண்டாகும்.

2. வாயால் உண்ணும் உணவு நம்மை கேட்காமல் திடீரென்று வாந்தி  வருவதும்.

3. கண்ணை அடிக்கடி விழித்து பிரட்டிக்கொண்டிருப்பதும் தலை  நடுங்குவதும்.

4. கனமான வாயு உடலில் திரண்டு வயிற்றில் கல் போல் தோன்றும்  என்றும்.

5. உடலில் தோன்றும் இந்த குடவாயுவானது பசியையும் மூத்திரமும்  வராமல் தடுக்கும் என்றும்.

6.உடலில் நெஞ்சு, விலா எலும்பு, குடல், கை , கால் தொடை போன்ற  பகுதிகளில் வலி இருக்கும் என்றும்.

7.வாயில் குடிக்கும் தண்ணீர் கூட நெருப்பாக இருக்கும், மலம் வெகுவாக  துர்நாற்றம் அடிக்கும் என்றும்,

8.வயிற்றில் நெருப்பு கூடி உண்ட அண்ணம் சீரணம் ஆகாமல் அப்படியே  வெளிவரும் என்று இருக்கிறது.

இந்த நோய்க்கு ” குடகரி நோய் “ என்ற பெயரை வைத்துள்ளோம். இதற்கான மருந்தையும் நம் குருநாதர் நூலில் தெரிவித்துள்ளார். நம் மக்கள்  அனைவரும் பயனடையும் விதத்தில் இங்கு கொடுத்துள்ளோம்.

ஓமம் – 10 கி
மிளகு – 10 எண்ணிக்கை
சுக்கு – 10 கி
பூண்டு – 5 பல்
திப்பிலி – 10 கி

மேலே கூறிய அனைத்தையும் இடித்து ஒரு பாத்திரத்தில் இட்டு 2 டம்ளர்  தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி 1 டம்ளராக வந்ததும் ஆர வைத்து  குடிக்கலாம். மேலே கூறியது 1 வேளைக்கான மருந்து. ஒரு நாளில் இரண்டு  வேளை காலை மற்றும் இரவு குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று  நாட்களுக்கு குடிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு இந்த குடகரி நோயின்  தாக்கம் உடலில் இருக்கும்.

இந்த குடகரி நோய் வந்தவர்களுக்கு உணவின் மேல் விருப்பம் இருக்காது,  அதனால் மாதுளை பழம் சூஸ் எடுத்து வடிகட்டி கொடுக்கவும். இந்த நோய்  வந்தவர்கள் நோய் நீங்கினால் கூட கை வலி,கால் வலி அசதி  போன்றவைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும். உடல் எடை குறைந்துள்ளதாகவும், தூங்கிக்கொண்டே இருப்பதாகவும், காய்ச்சல் சில  சமயங்களில் விட்டு விட்டு வருவதாகவும்,உடல் நரம்பு எல்லாம் வலித்து  கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குடகரி நோய்  வந்தவர்களும் வராதவர்கள் முன்னெச்சரிக்கையாக இந்த கசாயம் குடித்தால் நல்லது.  முடிந்தவரை இந்தப்பதிவை சென்னையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள்  அனுபவத்தையும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10 responses to this post.

 1. மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 2. அய்யா இது போல் ஆபத்து காலங்களில் சித்த மருந்து கூறுவது அதுவும்
  காச்சல் ” குடகரி நோய் “க்கு
  கடை சரக்கு மூலம் மருத்தும் அணைவருக்கும் கிடைக்கும் பயன்படுத்தவும் எளிமையாக பயனடைவாருகள் மகிழ்ச்சி அய்யா

  Like

  மறுமொழி

 3. Very very thanks ur valuable medicene

  Like

  மறுமொழி

 4. Your service is invaluable Thank you

  Like

  மறுமொழி

 5. தலைவருக்கு,
  தங்கள் குருநாதர் கூறிய ‘குடகரி நோய்க்குரிய’ மருந்தை உடனே தாயாரித்து அருந்தி வருகின்றேன். அல்லோபதி மருந்தை நிருத்தி விட்டு தாங்கள் கூறிய மருந்தை சாப்பிட்டு வருகின்றேன். மிக்க நன்றி தங்களுக்கு. தங்கள் மருத்துவம் வாழ்க
  விஸ்வநாதன்.

  Like

  மறுமொழி

 6. OM Agathesaya Namaha, Guruvae Saranam,Guruvin Thiruvadi Portti. I
  acknowledge with thanks receipt of message regarding chennai
  disease.This is very very useful to everyone suffering with seasonal
  disease. I thank & Wish one and all who are in Saint service with GOOD
  HEALTH,HAPPINESS,PROSPERITY,LONG LIFE, WISDOM ETC.,

  THANKS & REGARDS

  K.R.GANAPATHY

  Like

  மறுமொழி

 7. Ayya mika avasaram Naan enathu akkamahanukku muthuku valikku vaithiya vibaram kettu irunthein innum pathil kidaikkapperavillai vali athikam irunththathaal scan seithi paarththathil perungudalai ottinarpol muthuhuththandupakkamaaka 2 cm akalam 4 cm neelam katti ullathu ennukatti entru operation seithu eduththaal than thorium entru koori ullaarkal operation seivatharkku payappadukiraan thaangal engalukku uthavi seiyyumaru kettukkolkirein.thaangal anuppa sugar marunthai palanabarkalukku theriyappaduththi ullein nantri.

  Like

  மறுமொழி

 8. Posted by Ganesh Naren on ஜனவரி 18, 2016 at 3:32 பிப

  மிக்க நன்றி அய்யா,

  என் பையனுக்கும் நீங்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தன.நிலவேம்பு , சீந்தில் , துளசி , கரிசாலை எல்லாம் கொடுதோம். ஆனால் முழூமையாக குணம் அடையவில்லை.வயிறு வலியால் துடித்தான். பேதியும் தண்ணீராக போனது.நாற்றமும் அதிகமாக இருந்தது. என்னுடைய அம்மாவின் அறிவுரைபடி ஓமம்,மிளகு, பூண்டு,சீரகம் அனைத்தையும் இடித்து ஒரு பாத்திரத்தில் இட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி 1 டம்ளராக வந்ததும் ஆர வைத்து குடிக்க வைத்தோம்.முதல் நாளில் இருந்தே வயிறு வலி, காய்ச்சல் சரியாக ஆரம்பித்தது.

  இரண்டு நாட்கள் முன்பு தான் உங்களுடைய டிப்ஸ் படித்தேன். ஆச்சிரியபட்டேன்.

  உங்கள் சேவைக்கு நன்றி அய்யா.

  உங்களுக்கு ஆண்டவன் அருள் துணை புரியட்டும்

  Like

  மறுமொழி

 9. Iyya enakku our maathamaga udalil arippu irukkirathu hospital maatiraigal saapiddum kunamadaiyavillai pls enakku uthavungal

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: