நான்கு நாட்களில் தலைவலியை ( Headache ) நீக்கும் அற்புதமான தைல எண்ணெய் !

கடந்த 1 வருடமாக நம் வலைப்பூவில் இருந்து எந்தப்பதிவும் வரவில்லை என்று பல வாசகர்கள் இமெயில் மூலம் கேட்டிருந்தனர். உலகிலே மிகப் பெரிய வியாதியான கேன்சர், வலிப்பு, தசை சிதைவு போன்ற நோய்களுக்கு முழுமையான மருந்து இறைவன் அருளால் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இதைப்பற்றிய முழுமையான ஆய்வும் நடந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் ( WHO ) நிர்வாக இயக்குநர்களிடம் பேசுவதற்கான முதல் முயற்சியும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் கேன்சருக்கான மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். மிகவும் முற்றிய நிலையில் கேன்சர் உள்ள மக்களைத் தவிர மற்ற மக்களுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்கிறது. இதைப்பற்றிய சீரிய ஆய்வு நடைபெறுவதால் அடிக்கடி பதிவுகளை வெளியீட இயலாமல் இருக்கிறோம். இதற்காக தங்களுடைய பல மணி நேரங்களை செலவு செய்யும் நம் வாசகர்களையும், வாகன உதவி, இருப்பிட வசதி செய்யும் நண்பர்களையும், ஆய்வகத்தில் பணமே வாங்காமல் நமக்காக மருந்தை சோதித்து கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். நாளை இம்மருந்து உலகசுகாதார நிறுவனத்தால் அங்கிகரீக்கப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் போது ஏற்படும் சந்தோசமும் மகிழ்ச்சியும் நம்மைவிட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்யும் நம் வலைப்பூவின் வாசகி ஒருவர் தாங்கமுடியாத தலைவலி இருக்கிறது இதற்கு மருந்து வேண்டும் என்று கேட்டிருந்தார். தலைவலி அதிகமாக இருக்கும் நேரத்தில் அலோபதியின் வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதாகவும் அதுவும் சில மணி நேரங்கள் தான் வேலை செய்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக தலைவலி ஏன் வருகிறது என்றால் உடலில் எங்கோ பிரச்சினை இருக்கிறது அதை சுட்டிக்காட்டும் ஒரு அலராம் தான் தலைவலி. இதற்காக தலைவலியை மறக்க செய்யும் மருந்துகளை சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்காது. வயிற்றில் மலக்கழிவு இருந்தாலும் தலைவலி வரும். இப்படி எந்தவிதமான காரணமும் இல்லாமல் வரும் தலைவலிக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்று நம் குருநாதர் அகத்தியரின் நூலைப் பார்த்தோம்.

உடலில் வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமாக வரும் 36 பிரச்சினைகளுக்கும், ஒரு எண்ணெய் தைலம் செய்து தலையில் தேய்தால் குணமாகும் என்று இருந்தது. இந்த எண்ணெயை தேய்த்தால் முதலில் குணமாவது தலைவலி, கண் பார்வை தெளிவு, முடி உதிர்வை தடுக்க, தலையில் புற்று நோய் வராமல் தடுக்க , புதிதாக வெள்ளை முடி வராமல் இருக்க , உடல் சூடு குறைய இது போல் 36 வகையான நோய்களையும் போக்கும் ஒரு அற்புதமான தைலத்தைப் பற்றி தான் குறிப்பிட்டிருந்தார். இந்த தைலத்தை நம் தளத்தின் வாசகிக்கு தெரியப்படுத்தி இருந்தோம். இதில் இரண்டு மூலிகைகள் இல்லை என்பதால் சில நாட்கள் தாமதம் ஆனது. அதன் பின் எல்லா மூலிகைகளும் நூலில் குறிப்பிட்டது போல் இந்த தைலத்தை காய்ச்சி அந்த பெண்மணியிடம் தினமும் இரவில் தலையில் தேய்க்கும் படி கூறி இருந்தோம். சரியாக நான்கே நாட்களில் தலைவலி இருந்த இடமே சொல்லாமல் சென்றுவிட்டது. அதன் பின் தலைவலி உள்ள பலருக்கும் இந்த தைலத்தை கொடுத்து முழுமையான குணமும் கிடைத்திருக்கிறது. இயற்கை உணவு உலகத்தின் வாசகர்களுக்காக இந்த தைலத்தை உருவாக்கும் முறையை தெரியப்படுத்துகிறோம்.

மரச்செக்கு நல்லஎண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
பெரிய நெல்லிக்காய் சாறு – 1 லிட்டர்
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
அயபானி செடி காய வைத்த இலை – 300 கிராம்
சிறு சஞ்சீவி செடி காய வைத்த இலை – 100 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து சரக்குகளையும் நன்றாக அடுப்பில் கலந்து மிதமான தீயில் வைத்து சரியாக மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் எரித்து தைலைத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரவு படுக்கும் போது இந்த தைல எண்ணையை தலையில் தேய்த்தால் பல நோய்கள் நம்மை விட்டு விலகும். இவ்வளவு அரிதான தைல எண்ணையை மக்களுக்கு செய்து கொடுக்க நம்பிக்கையான நபர்கள் பலர் ஒத்துழைப்பு செய்திருக்கின்றனர். ஏற்கனவே நம் வலைப்பூவில் இணைந்துள்ள நம் வாசகர்களுக்கு முன்னுரிமை உண்டு. மேலே குறிப்பிட்ட தைலத்தை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் இங்கு கொடுத்திருக்கும் படிவத்தில் தங்களின் முழுமையான தகவல்களை தெரிவித்தால் நம் தைல எண்ணெய் எங்கு கிடைக்கும் என்ற தகவலை தெரியப்படுத்துகிறோம். மனித உழைப்பு , வாகன உழைப்பு எல்லாம் சேவையாக பலர் செய்வதால் அதை எல்லாம் தாண்டி 120 மிலி தைல எண்ணெய் உருவாக்க ரூ. 120 செலவாகிறது. 1 நபர் மாதம் 120 மிலி எண்ணைய் இரண்டு முறை வாங்கிக்கொள்ளலாம். இவ்வளவு முக்கியமான தைல எண்ணையை கூரியரிலில் அனுப்ப வேண்டாம். நேரில் வந்து வாங்கினால் தான் பொருளின் முக்கியத்துவம் தெரியும் என்ற காரணத்தினால். நேரடியாக சென்னை வேளைச்சேரி அல்லது பொள்ளாச்சியில் மட்டுமே இந்த தைல எண்ணெய் கிடைக்கும். முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம். எண்ணெய் கொடுப்பவர்கள் கூட இதை ஒரு சேவையாகத் தான் செய்கின்றனர் அதனால் வியாபரிகளிடம் பேசுவதைப் போல் பேசினால் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். உண்மையான அன்பையும் நன்றியையும் பணிவுடன் தெரிவித்து மருந்தை பெற்றுக்கொள்ளுங்கள். இறைவன் அருளால் விரைவில் மிகப்பெரிய நோய் ஒன்றை குணப்படுத்திய வழி முறையுடன் சொல்ல இருக்கிறோம்.

 

 

 

Advertisements

5 responses to this post.

 1. Posted by David David on மே 17, 2018 at 8:34 முப

 2. Posted by jaya chandiran on மே 17, 2018 at 3:56 பிப

  அன்புள்ள ஐயா , வணக்கம் ..நான் உங்களால் பலனடைந்த கோடி மக்களில் ஒருவன். கோடி நமஸ்காரம் .. எனக்கு ldl  கொலெஸ்டெரோல் (கொழுப்பு ) 169 என்ற அளவில் உள்ளது , எனக்கு தயை கூர்ந்து மருந்து அருளும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன் . தங்கள் அன்புள்ள 

  ஜெயா 

  மறுமொழி

 3. Posted by கார்த்திகேயன் கோ on மே 17, 2018 at 7:00 பிப

  பேரன்புமிக்க ஐயா!

  அருமையான பதிவு குருநாதருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி மற்றும் தங்கள் சேவை தொடர பிரார்த்திக்கிறேன்.

  அன்புடன்,
  கார்த்திகேயன்
  மேச்சேரி.

  மறுமொழி

 4. Posted by கார்த்திகேயன் கோ on மே 17, 2018 at 7:05 பிப

  பேரன்புமிக்க ஐயா, வணக்கம்

  நீண்ட நாள் கழித்து மிக அற்புதமான, அத்தியாவசிய பதிவுக்கு குருநாதருக்கும், தங்களுக்கும் மிக்க நன்றி… மேலும் தங்கள் சேவை தொடர எனது பிரார்த்தனைகள்

  அன்புடன்
  கார்த்திகேயன்
  மேச்சேரி

  மறுமொழி

 5. Posted by anbuvelayutham on மே 18, 2018 at 7:04 முப

  நீண்ட இடைவெளிக்குப்பிறகு சித்தர் வெளி வந்திருக்கிறார். என்ன தவம் செய்தனையோ! வாருங்கள் அடிக்கடி வாருங்கள்
  -அன்பு…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: