எல்லாம் வல்ல எம் குருநாதரின் அன்பினால் இந்தப்பதிவை உங்களுக்கு காணிக்கையாக்குகிறோம். இரத்தக்குழாயில் வரும் சிகப்பு அல்லது செம்பழுப்பு நிற தோல் கட்டி பெரும்பாலும் எல்லா வயதினருக்கும் வருகிறது.
இதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணியின் 1 1/2 வயது குழந்தைக்கு இந்த இரத்தக்குழாய் கட்டி காதின் அருகில் இருக்கிறது என்றும் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பம் இல்லை என்றும் இயற்கை மருந்து வேண்டும் என்று கேட்டு புகைப்படத்துடன் இமெயில் அனுப்பி இருந்தார். அலோபதி மருத்துவத்தில் லேசர் சிகிச்சை செய்யலாம் அல்லது ஊசி மூலம் மருந்தை அந்த கட்டிக்குள் செலுத்தியும் சிகிச்சைப் பெறலாம் என்றாலும் இதனால் வரும் அத்தனை விளைவுகளையும் கூகிளில் சென்று தேடிப்பார்த்து இந்த முறை சிகிச்சையே வேண்டாம். நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில் தீர்வைத் தேடி இந்த சகோதரி கேட்டிருந்தார். இவருக்கான மருந்தை தெரியப்படுத்துமுன் வள்ளுவரின் குறளுடன் தொடங்குவோம்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் விடா முயற்சி செய்தால் அதுவே மிகப்பெரிய வெற்றியையும் பெருமையையும் நமக்கு பெற்றுத்தரும்.
பொதுவாக இரத்தக்குழாய் கட்டி தோலின் மேல் வருவதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் அகத்தியரின் ஏட்டுக்குறிப்பில் இரண்டே முக்கிய காரணங்கள் தான் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது.
1. தொப்புள் கொடி சரியாக அல்லது முறையாக வெட்டப்படாமல் இருந்தாலோ அல்லது தொப்புள் கொடி வழியாக அழுக்கு அல்லது கிருமிகள் சென்றிருந்தாலோ இது வரலாம் என்று இருக்கிறது.
2. தாயின் உடல் வெப்பநிலை மிகக்குறைவாக இருந்து கணவரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏடு கூறுகிறது.
இதுவரை உலகின் எந்த மருத்துவ முறையும் ஏன் இந்த நோய் வருகிறது என்ற காரணத்தை தெரியப்படுத்தவில்லை ஆனால் சித்தர்கள் மிகச் சாதாரணமாக சொல்லி இருக்கின்றனர். இதற்கான மருந்தும் எளிமையாக இரண்டே வரியில் சொல்வது தான் இன்னும் சிறப்பு.
இரத்த நிறத்தில் வடிவமே இல்லாமல் உடலில் வரும் கட்டிக்கு
காசுக்கட்டியும் மஞ்சளும் வெந்நீரில் உரைத்துப் போடு கட்டி சொல்லாமலே ஓடும்.
பொய் வைத்தியன் காசுக்காக பல மருந்துகளையும் பஸ்பங்களையும் சுண்ணத்தையும் முறை அறியாமல் கொடுத்து அத்தனை பாவங்களையும் வாங்கிக்கொள்வான். என் செல்லக்குழந்தாய் மேலே சொன்ன மருந்தை கொடு நாமே அருகில் இருந்து குணப்படுத்துவோம் என்று நூலில் வாக்களித்துள்ளார்.
காசுக்கட்டி பயன்படுத்துவதால் எந்தப்பாதிப்பும் இல்லை என்று தெரிந்தாலும் மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தினால் ஒன்றைவயது குழந்தை அதை தாங்குமா ? வலிக்குமோ ? அதைச்சொல்ல முடியாமல் குழந்தை அழுமோ ? இன்னும் கட்டியை பெரிதாக்கிவிடுமோ என்று நமக்குள் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரே வரியில் குருநாதரே “ நாம் அருகில் இருந்து குணப்படுத்துவோம் “ என்ற சாசுவதமான வாக்கை மனதில் கொண்டு இந்த மருந்தைப்பற்றி இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தோம். இயற்கை உணவு உலகத்தின் ( Naturalfoodworld.wordpress.com ) மூலம் இவர்களுக்கு அனுப்பப்பட்ட மருந்து பதில்.
காசுக்கட்டி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள், அதன் பின் அதை மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து நன்றாக பசைபோல் ஆக்கி பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் பூசுங்கள், மூன்று மணி நேரம் கழித்து நன்றாக கழுவிவிடுங்கள். இரண்டு வாரம் கழித்து எப்படி இருக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். ஏதாவது மாற்றம் ஏற்பட்டல் உடனடியாக தெரியப்படுத்தவும்.
இம்மருந்தை பயன்படுத்த ஆரம்பித்த பின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த நோய் சில மாதங்களிலே முழுமையாக குணமடைந்திருக்கிறது என்றால் குருநாதரின் கருணையை என்ன சொல்ல, மேலே குறிப்பிட்ட வள்ளுவரின் குறளின்படி விடாமுயற்சியும் முழுமையான நம்பிக்கையும் இந்த வெற்றியை இவர்களுக்கு கொடுத்திருக்கிறது. தன் குழந்தையின் உடல் நிலை சரியாகிவிட்டதோடு இந்தமருந்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி இதுபோல் இரத்தக்குழாய் கட்டியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இமெயில் மூலம் கேட்டிருந்தார். நோய் குணமடைந்த பின் நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாமல் எருமை மாடுகளைப் போல் எனக்கென்ன என்று செல்லும் மக்களுக்கு மத்தியில் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் புகைப்படத்துடன் தெரியப்படுத்தி இருந்த சகோதரி ரம்யாவிற்கு இயற்கை உணவு உலகத்தின் சார்பில் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். குருநாதரின் அன்பும் கடாட்சமும் அவர்களின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டுகிறோம். கண்களில் இருந்து வரும் ஆனந்த கண்ணீரோடு விடைபெறுகிறோம். மீண்டும் அடுத்த ஆச்சர்யமான மருந்து ஒன்றோடு பதிவில் சந்திக்கிறோம்.
இந்தப்பதிவு பலருக்கும் பயன்படும் என்று நினைத்தால் மறக்காமல் பேஸ்புக் மற்றும் வாட்சஸப் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Posted by Mahesh on ஜூன் 25, 2018 at 10:37 முப
Ayya,
Ennaku Creatine adigamaga ulladu kidney function stop ayiduchu, vaaram 3 murai dialysis panikondu irukeren anal creatine level 11.0 vil uladu.
Edai seerpadutha ungal vaidiyathil marundu edavadu sollavum.
LikeLike
Posted by SATHYA BAMA B on ஜூன் 25, 2018 at 11:00 முப
mikka nanri ayya. migavum payanulla padhivu. fattly liver. idhaku theervu therivithaal aayul mulukka marakka nanri solven.
LikeLiked by 1 person
Posted by murugan on ஜூன் 25, 2018 at 12:54 பிப
supper, thanks god
LikeLiked by 1 person
Posted by Sampath Ramu on ஜூன் 25, 2018 at 1:26 பிப
Sir. Thanks for yours mail . I am always looking your email.
Thanking your
S Ramu
LikeLiked by 1 person
Posted by Jothimurugan on ஜூன் 25, 2018 at 2:26 பிப
service to needy people is service to God. Those who have faith on Maharishi will get his blessings. His blessings will definitely save his children from all kinds of trouble.
LikeLike
Posted by ஜ. காளத்தி on ஜூன் 28, 2018 at 7:34 முப
நன்றி
LikeLike
Posted by Saravanan Surulimuthu on ஜூன் 28, 2018 at 10:18 முப
ஐயா நான் தங்களது பதிவிற்காக நெடுநாள் காத்திருந்தேன் .எனது தந்தைக்கு
65வயதாகிறது அவருக்கு 6மாதமாக குடலிறக்கம் இருபக்கமும் வலது இடது பக்கங்கள்
இருக்கிறது அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
என்கிறார்கள் ஆனால் எனக்கு உடன்பாடில்லை அதற்கு ஹோமியோபதி மருந்து வாங்கி
கொடுத்து ள்ளேன் ஆகவே அதற்கு தகுந்த மருந்தை அகத்தியர் அருளால் தெரிவிக்க
வேண்டுகிறேன் நன்றி
LikeLike
Posted by manahavalaperumal r on ஜூன் 28, 2018 at 1:19 பிப
please send the medicine details for veriscovein
________________________________
LikeLike
Posted by SARAVANAN A on ஜூலை 5, 2018 at 2:49 பிப
Sir,
I am A.Saravanan from Bhavani 34 year old and weight 97 kg,
I have varicose vein from last 10 years kindly give any solution for me,
Regards
A.Saravanan
LikeLike
Posted by SundarRamasamy on ஜூலை 5, 2018 at 7:26 பிப
மிகவும் சிறப்பு
LikeLike