Archive for the ‘இயற்கை உணவு விளக்கம்’ Category

இயற்கை வாழ்வும் , இயற்கை மருத்துவமும் சிறப்பு கட்டுரை

மனிதன் நோய் அனுகாமல் இருக்க இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்றும் இதனால் ஏற்படும் நன்மைகளை விரிவாக கட்டுரையாக நமக்கு கொடுத்துள்ளார் நண்பர் உலகநாதன் அவர்கள்,

இவர் கொடுத்த பயனுள்ள கட்டுரையை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படங்களை சொடுக்கி பெரியதாக்கி படிக்கலாம். இயற்கையை நேசிக்கும் நண்பரின் இக்கட்டுரையில் இயற்கையின் மேல் அவருக்கு இருக்கும் அன்பு தெரிகிறது. இயற்கை உணவு உலகத்தின் அனைத்து நண்பர்களின் சார்பிலும் நண்பருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை.

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.

எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம். Continue reading

இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்

இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.

முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக
தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள்.  ஆனால் காலம் மாறியதும்
தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை
அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி
என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும்
என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து
பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.
உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே
கொண்டுவந்திருக்கிறது  வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால்
பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம்
சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான்
இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.

இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு
திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு
ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம்
உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான்
நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல்
இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.

அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும்
பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில்
இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது. மனிதனை
எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல்
வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும்
இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான்.
சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த
காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு
தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ? சீறுநீர கல் பிரச்சினைக்கு
இயற்கை உணவின் மூலம் மூன்றே நாளில் முழுமையாக
குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியை அடுத்த பதிவில் விரிவாக
பார்க்கலாம்.

இயற்கை உணவில் வாழ்ந்தால் மனிதன் மருத்துவரை தேடிச் செல்லவே வேண்டாம்

மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த பறவைகள் அல்லது
விலங்குகள் ஏதாவது மருத்துவரை தேடிச்செல்கிறதா ? நாம் மட்டும்
நம் உடலில் நோய்களை வரவழைத்துக் கொண்டு ஏன் மருத்துவரை
தேடிச்செல்கிறோம். இயற்கை அன்னையின் படைப்பின் படி இங்கு
வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மனிதனுக்கும் உணவே
மருந்தாகவும் இருக்கிறது.
சற்று யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும். பறவைகளோ
விலங்குகளோ இயற்கையில் கிடைக்கும் தானியத்தை உண்டும்,
விலங்கள் கூட மாமிசத்தை வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுகிறது.
இதற்க்கு எந்த நோயும் வருவதில்லையே. அப்படியே சிலநேரங்களில்
ஏதாவது நோய்வந்தாலும் எந்த மருத்துவரையும் பார்க்கச் செல்லுவதில்லையே
நோய் தானாகவே குணமாகிவிடுகிறது.

மாமிசம் சாப்பிட நாம் விலங்குகள் அல்ல மனிதர்கள், கொஞ்சம் யோசித்து
பாருங்கள் அசைவம் சாப்பிடும் விலங்குகள் அனைத்திற்க்கும் கோறைப்பற்கள்
இயற்கையாகவே இருக்கும் நமக்கு அப்படி கோறை பல் இல்லையே
அடுத்து அசைவம் சாப்பிடும் விலங்குகளின் குடல் மிகச்சிறியது நம்
அளவிற்க்கு குடல் அதற்க்கு நீளம் இல்லை. காரணம் என்னவென்று
தெரியுமா ? மாமிசம் அதிகமாக மலச்சிக்கலை உண்டு பண்ணும் நம்
குடல் வேறு நீளம் அதிகம் அதனால் நம் மலக்குடலில் கழிவுகள்
சேர்ந்து நமக்கு நோயை உற்பத்தி செய்கிறது. மலச்சிக்கல் இல்லாமல்
இருந்தாலே மனிதனை பல நோய்கள் நெருங்கவே நெருங்காது.
இதற்காகத்தான் எல்லா மதங்களிலும் இயற்கை உணவை வைத்து
வழிபட்டார்கள் எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இயற்கை உணவு – விளக்கம்

இயற்கை உணவு என்பது இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும். இப்படி கிடைக்கும் இயற்கை உணவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை முதன்மையான இயற்கை உணவு :


வாழைப்பழம் , மாம்பழம் ,பப்பாளி, கொய்யா, ஆப்பிள் , சப்போட்டா, சீதாப்பழம்,மாதுளை, திராட்ச்சை,அன்னாச்சிப்பழம்,பேரீச்சை,எலுமிச்சை, பலாப்பழம்.

இரண்டாம் வகை இயற்கை உணவு :

இரண்டாம் வகை இயற்கை உணவு
இரண்டாம் வகை இயற்கை உணவில் பூமிக்கு மேல் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் தானியங்களும் அடங்கும் ,கேரட்,பூசணிக்காய்,வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அனைத்து வகை கீரைகளும் அடங்கும்.

மூன்றாம் வகை இயற்கை உணவு :


மூன்றாம் வகை இயற்கை உணவில் பூமிக்கு கீழே கிடைக்கும் அனைத்து கிழங்குவகைகளும் அடங்கும் முதல் வகை இயற்கை உணவு மனிதர்களுக்காகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை இயற்கை உணவுகள் உயிரினங்களான ஆடு ,மாடு,கோழி, பறவைகளுக்காகப் படைக்கப்பட்டவை. அடுத்தப்பதிவில் இதைபற்றிய விரிவான விளக்கம் பற்றி பார்ப்போம்.

%d bloggers like this: