Archive for the ‘சித்தர்கள் – அகத்தியர்’ Category

மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !

இப்பதிவை தொடங்கும் முன் எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும், நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். அலோபதி மருத்துவத்தால் முடியாத எத்தனையோ விடயங்களை சித்தர்களின் மருத்துவம் சாதாரணமாக குணப்படுத்தும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு, கேன்சர் மூளைக்கட்டியால் மருத்துவரால் இதற்கு மேல் மருத்துவம் கிடையாது என்று சொல்லி  அனுப்பிய ஒரு நபருக்கு இயற்கை மருத்துவம் கொடுத்த புதிய  வாழ்க்கையைப்பற்றி தான்.

Brain Tumors

கடந்த ( 2014 ) -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் ஒரு  நபருக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கிறது என்றும் இவரைப்பற்றிய  முழுவிபரங்கள் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் என அனைத்தும் அனுப்பி இருந்தார் இவரின் மைத்துனர், இவரை சோதித்த அலோபதி மருத்துவர்கள்  ஹீமோ, ரேடியோ தெரபி என அனைத்தும் செய்து முடித்து விட்டு எங்களால்  உதவ முடியவில்லை கேன்சர் செல்கள் அதிவேகமாக பரவுகிறது என்று  கூறியதோடு ஒன்றிரண்டு மாதங்கள் தான் இருப்பார் என்று சொல்லி  கேன்சருக்கான பிரேத்யேக தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர்.  ரேடியோ ஹீமோ என அனைத்து சிகிச்சைகள் எடுத்தும் இவரின் தலைவலியைக் கூட குறைக்க முடியவில்லை இந்த நிலையில் தான் நம்மிடம் தொடர்பு கொண்டார், Continue reading

இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !

எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் எம் குருநாதருக்கும் நன்றி. சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் என்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி இதுவரை 3500 பேர் தங்களின் முழுமையான தகவலை கொடுத்து நம் தளத்தில் இணைந்துள்ளனர் இதில் வெளிநாட்டில் வசிக்கும் நம் தமிழ் உறவுகளே அதிக அளவில் இணைந்துள்ளனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாகவே காடுகளில் மூலிகை தேடியபடி நம் பயணம் இருந்தது, இதற்காக சதுரகிரி, கொல்லிமலை போன்ற பகுதியில் இருந்த நம் நண்பர்களின் ஒத்துழைப்பும் அன்பும் வார்த்தையால் விவரிக்க முடியாது. நம்முடன் வந்த மலைவாழ் மக்களில் ஒருவர் மழையே இல்லாமல் காடுகளில் செடி,கொடி எல்லாம் இல்லாமல் சென்று விடும்போல் இருக்கிறது, குருநாதரிடம் மழைக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார், நாமும் கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறோம் என்றோம். அருகில் வந்தவர் சிரித்துவிட்டு கூறினார்  மழைக்காலத்திலே மழை வரவில்லை கோடைகாலத்திலா மழை வரும் என்று. அப்போது உடனடியாக தோன்றிய யோசனை குறிப்பிட்ட ஒரு நாளில் நம் வாசகர்கள் அனைவரும் இயற்கை அன்னையிடம் மழைக்காக Continue reading

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

ஜலதோசம், தும்மல்

ஜலதோசம், தும்மல்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக Continue reading

சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.

சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை உணவு உலகத்தின் வாசகர் ஒருவர்  பின்னோட்டத்தில் ஒரு கேள்வி எழுதி இருந்தார். அவர் அனுப்பிய செய்தி  பின்வருமாறு.
// தயவு செய்து மருந்துகளையும் உங்கள் வலைப் பதிவிலேயே தெரிவியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோய்க்கு கூறிய மருந்தை நான் பல பேருக்கு சொல்லி
மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததன் காரணமாக பல பேர் இன்று
பயனடைந்திருக்கிறார்கள். இதை வைத்து பிழைக்க நினைக்கும் சில
அற்பர்களுக்காக பல பேருக்கு போய்ச் சேர வேண்டிய கருத்தை
மறைக்காதீர்கள் இப்படி மறைத்து மறைத்துத்தான் பல இயற்கை மருந்துகள்
தெரியாமலே போய் விட்டன. //

அன்பருக்கு தாங்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த மருந்தை கண்டுபிடித்தது நாம் அல்ல , ஏற்கனவே சித்தர்கள்  கண்டுபிடித்து எழுதி வைத்ததைத்தான் நாம் சொல்கிறோம்.நமக்கு பரிபாசையில் இருக்கும் மருந்தை புரிய வைத்த எம் குருநாதர் அகத்தியர் சொல்லும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம்  கட்டுப்பட்டவராகத்தான் இருக்க முடியும். குருநாதர் நூலில் தெரிவித்ததை அப்படியே தெரிவிக்கிறோம். Continue reading

சித்தர்கள் – அகத்தியர் அருளிய மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து – ஏட்டில் புதைந்திருக்கும் அதிசயம்.

எல்லாம் வல்ல விநாயகருக்கும், நம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் முதல் நன்றி !

குருவடி சரணம் – திருவடி சரணம்

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் மூன்று முக்கிய நோய்களுக்கு ஒரே மருந்தின் மூலம் சராசரியாக 48 நாட்களில் குணப்படுத்தலாம்.  நோய்களின் ஆரம்ப வேரை கண்டறிந்து அதை நீக்குவதன் மூலம்  பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். சித்தர்களின் மருத்துவ முறைப்படி முதலில்  மருந்தாக ” இலையையும் “ ” வேரையும்” கொடுக்க வேண்டும் இது தப்பினால் ரசமும்  சுன்னமும் கொடுக்கலாம். ஒரு மனிதருக்கு ஏன் நோய் வருகிறது என்பதில் தொடங்கி எளிதான மூலிகைகளை கொண்டே நோய்களை நிரந்தரமாக நீக்கும் முறைகள் பல  இருக்கின்றது அந்த வகையில் Continue reading

%d bloggers like this: