Archive for the ‘மருத்துவர் தேவையில்லை’ Category

மூன்றே நாளில் பன்றிக்காய்ச்சல் Swine flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !

எல்லாம் வல்ல நம் விநாயகப்பெருமானுக்கும், குருநாதர் அகத்தியருக்கும், இயற்கை அன்னைக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உலகில் மிக வேகமாக பரவி வரும் ஒரு கொடிய நோயான பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து தேடி பல ஆராய்ச்சி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் முயன்று வருகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்பெருமக்களுக்கு இதெல்லாம் வெறும் சாதாரன விசயம் தான். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து மருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒரு வியாதிக்கு மூன்றே நாளில் குணமாக்கும் மருந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? ஒரு மனிதனின் உயிருக்கு சவால் விடும் நோயில் ஒன்றுதான் தான் இந்த பன்றிக்காய்ச்சல், எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாத ஒன்று உண்டு என்றால் அது நேரமும் உயிரும் தான். அப்படிப்பட்ட உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள் கூட பன்றிக்காய்ச்சலை கண்டு அஞ்சுவதும், இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக தான். இனி யாரும் பன்றிக்காய்ச்சலை கண்டுபயப்பட தேவையில்லை. 1 1/2 வயது குழந்தைக்கு வந்த பன்றிக்காய்ச்சல் மூன்றே நாளில் நம் இயற்கை மருந்தின் மூலம் குணம் கிடைத்துள்ளது. இந்த குழந்தையின் தாய் ஒரு பிசியோதெரபி மருத்துவர். முதலில் குழந்தையின் தந்தை கூறும் அனுபவத்தை பார்ப்போம். Continue reading

ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து – குணமானவரின் ஆடியோ பேட்டி !

upset-man

நம் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த சில மாதத்திற்கு முன்பு நம் வலைப்பூ வாசகர் ஒருவர் மூலம் அவரின் நண்பர்  ஒருவருக்கு பாலியல் ரீதியான சில பிரச்சினைகள் இருக்கிறது இதற்கு மருந்து  இருக்கிறதா என்று கேட்டார், பெரும்பாலும் பாலியல் ரீதியான பிரச்சினைக்கு நாம் மருந்து  கொடுக்க ஒரு போதும் விரும்புவதில்லை ஊருக்கு ஊர் , தெருவிற்கு தெரு மருத்துவமனை திறந்து இதைத்தானே செய்கின்றனர் அவர்களிடம் சென்று காட்டுங்கள்  என்று சொல்லிவிட்டோம். ஆனால் அதற்கு அவர் ஒரு முறை தம் நண்பரிடம் நேரில்  பேசுங்கள் அப்போது தான் அவர் படும் துன்பம் புரியும் என்றார், சரி என்று நேரில்  வரச்சொல்லி இருந்தோம், நேரில் வந்து பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொல்ல மனம்  உண்மையிலே கலங்கிவிட்டது, வாழ்வதை விட இந்த பூமியைவிட்டு செல்லலாம் என்று  ஒருவர் கூறினால் பிரச்சினையின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர முடிந்தது. எவ்வளவு நாட்களாக இந்தப்பிரச்சினை இருக்கிறது என்று கேட்டோம் அவர் 10 வருடங்களுக்கும் மேல் என்றார், அலோபதி மருத்துவர் மட்டுமல்லாமல் பிரபல பல  வைத்தியர்களை சந்தித்திருக்கிறேன் எங்கும் தீர்வு இல்லை என்ற பதிலும், இவரை  பரிந்துரை செய்த நபரும் பிரபல வைத்தியர் தான் என்பதால் இவருக்கு சாதாரண ஒரு  மருந்தை கொடுத்து குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக காட்டியது.

எல்லாம் வல்ல நம் குருநாதர் அகத்தியம் பெருமான் தன் நூலில் ஒரு ஆணுக்கு வரும்  அனைத்து வகையான பாலியல் பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து இருக்கிறது என்பதை Continue reading

வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த Continue reading

ஆறு நாட்களில் கால் ஆணி முழுமையாக குணமானவரின் சிறப்பு பேட்டி ( புகைப்படத்துடன் )

மூலிகை பயன்படுத்தும் முன்

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் ”கால் ஆணி “. காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும் , செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்,  சென்னையில் இருக்கும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நம் வலைப்பூ நண்பர் விஸ்வநாதன் என்பவர் கடந்த மாதம் தன் காலில் “ கால் ஆணி “  இருப்பதாகவும் மூன்று மாதமாக பல ஆங்கில மற்றும் சித்த மருந்து எடுத்தும் குணமாகவில்லை என்று கூறி ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறு கூறினார், இயற்கை மேல் முழு நம்பிக்கை உள்ள அவருக்காக அகத்தியரின் குணபாடத்தில் உள்ள ஒரு மூலிகையை கூறி இதை தொடர்ந்து 9 நாட்கள் பயன்படுத்துங்கள் உடனடியாக மாற்றம் இருக்கும் என்று Continue reading

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.

8 மாதம் கழித்து இயற்கை உணவு உலகத்தின் அடுத்த படைப்பாக முதுகுவலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கப்போகும் இந்தப்படைப்பை உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான முதுகு வலிக்கு உடனடித் தீர்வு அளிக்க கூடிய வகையில் நம் சித்தர்கள் பாடல் ஒன்று அறியப்பெற்றோம். பாடல் படித்து முடித்த பின் முதுகு வலிக்கு இப்படி ஒரு பயிற்சியா என்று ஆச்சர்யம் தான் மேலிட்டது.

இந்தப்பயிற்சி செய்ய எந்த ஆசிரியரும் ஒரு தேவையில்லை, இதற்கு என்று தனியாக நேரம் எல்லாம் ஓதுக்க வேண்டாம் நாம் தூங்கும் போதே செய்யலாம். இவ்வளவு மணி நேரம் தான் செய்ய வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. எந்த உபகரங்கணளும் தேவையில்லை. நாம் அறியப் பெற்ற பாடலை வைத்து படம் ஒன்று Continue reading

%d bloggers like this: