இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி. சரியாக 5 மாதத்திற்கு பின் இந்தப்பதிவு நம் தளத்தில் இருந்து வெளிவருகிறது. லட்சகணக்கான இமெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்புவதற்கு சில மாதங்கள் கூட எடுத்துக்கொண்டது, மீதமுள்ள சில நூறு இமெயில்களுக்கும் இறைவன் அருளால் விரைவில் பதில் அனுப்புகிறோம். நம் தளத்திலே மருந்தை தெரிவிக்கலாமே என்று பல பேர் கேள்வி கேட்கின்றனர், நம் சித்தர்களின் பாடலில் தேடி வந்து கேட்பவர்களுக்கு மட்டும் மருந்து கொடு என்று இருக்கிறது, அதனால் தான் இமெயில் மூலம் கேட்க சொல்லி மருந்து அனுப்புகிறோம், நமக்கு வரும் பல இமெயில்களில் ஒரே வரியில் கேள்வி கேட்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர், நோயாளியின் பெயர் , வயது , அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாமல் எப்படி மருந்து கொடுப்பது ? இந்த காரணத்தினால் பல இமெயில்களுக்கு பதில் அனுப்ப இயலாமல் போனது.
9 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பெண்மணி (வயது 70) தன் நோய்க்காக மருந்து கேட்டு இருந்தார், ஒரு அரிய வகை நோய் தான், சித்தர்களின் பாடலில் எளிமையான மருந்து இருந்தது உடனடியாக அதை அப்படியே அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கு அந்த அம்மா இங்கு நீங்கள் தெரியப்படுத்திய மூலிகைகள் ஏதும் இல்லை என்று கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தினால் Continue reading