நம் உடலின் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை (100.4 F) விட உயர்ந்து காணப்படும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. பல காரணங்களினால் நமக்கு காய்ச்சல் வந்தாலும் பல நேரங்களில் நுண் கிருமிகள் மற்றும் விஷக்கிருமிகளின் தாக்கத்தால் தான் காய்ச்சல் வருகிறது. சில நேரங்களில் அதிகமான வேலைப்பளு மற்றும் அசதி, ஜலதோசம் போன்ற நேரங்களிலும் காய்ச்சல் வருவதுண்டு இது போன்ற காய்ச்சலுக்கு இதற்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக வேலை செய்யும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் இதற்காக தான் நிலவேம்பு குடிநீர் குடித்தும் சரியாகவில்லை என்று எழுதியிருந்தார். பெரும்பாலும் அனைத்து காய்ச்சலுக்கும் நிலவேம்பு குடிநீர் வேலைசெய்யுமே ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டிருந்தோம் அதற்கு அவர் இரண்டு மணி நேரம் காய்ச்சல் விடுகிறது மறுபடியும் காய்ச்சல் வருகிறது மருத்துவரிடம் சென்று Continue reading