சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை உணவு உலகத்தின் வாசகர் ஒருவர் பின்னோட்டத்தில் ஒரு கேள்வி எழுதி இருந்தார். அவர் அனுப்பிய செய்தி பின்வருமாறு.
// தயவு செய்து மருந்துகளையும் உங்கள் வலைப் பதிவிலேயே தெரிவியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோய்க்கு கூறிய மருந்தை நான் பல பேருக்கு சொல்லி
மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததன் காரணமாக பல பேர் இன்று
பயனடைந்திருக்கிறார்கள். இதை வைத்து பிழைக்க நினைக்கும் சில
அற்பர்களுக்காக பல பேருக்கு போய்ச் சேர வேண்டிய கருத்தை
மறைக்காதீர்கள் இப்படி மறைத்து மறைத்துத்தான் பல இயற்கை மருந்துகள்
தெரியாமலே போய் விட்டன. //
அன்பருக்கு தாங்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த மருந்தை கண்டுபிடித்தது நாம் அல்ல , ஏற்கனவே சித்தர்கள் கண்டுபிடித்து எழுதி வைத்ததைத்தான் நாம் சொல்கிறோம்.நமக்கு பரிபாசையில் இருக்கும் மருந்தை புரிய வைத்த எம் குருநாதர் அகத்தியர் சொல்லும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் கட்டுப்பட்டவராகத்தான் இருக்க முடியும். குருநாதர் நூலில் தெரிவித்ததை அப்படியே தெரிவிக்கிறோம். Continue reading